நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குமரியில் கண் மருத்துவர்களுக்கு பயிலரங்கு

தேசிய அளவில் கண் மருத்துவர்கள், பயிற்சி மாணவர்களுக்கான கண் பரிசோதனையில் நவீன கண்டுபிடிப்புகள்

Updated On :26 பிப்ரவரி 2019, 1:33 am IST

தேசிய அளவில் கண் மருத்துவர்கள், பயிற்சி மாணவர்களுக்கான கண் பரிசோதனையில் நவீன கண்டுபிடிப்புகள் குறித்து கன்னியாகுமரியில் பயிலரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பயிலரங்கிற்கு நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனைத் தலைவர் எஸ்.எம்.பெஜான்சிங் தலைமை வகித்தார். பெஜான்சிங் கண் மருத்துவக் கல்லூரி முதல்வர் பிராயன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். பயிலரங்கினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். 
பயிலரங்கு மலரை கல்லூரி நிர்வாகமேலாளர் டாக்டர் ருஸிதா வெளியிட  எஸ்.பி. பெற்றுக் கொண்டார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் திருவேங்கட செந்தில்குமார் பங்கேற்றுப் பேசினார். பயிலரங்கில் கண் மருத்துவத்தில் மேம்படுத்தப் பட்ட அதி நவீன கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம்,  கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கண் மருத்துவர்கள், கண் கண்ணாடி நிபுணர்கள், பார்வை குறைவு நிபுணர்கள்,  பயிற்சி மாணவர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நேசன் பெரைரா ஆண்டறிக்கை வாசித்தார். சலீல் அகமது வரவேற்றார். முகிசீம் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.