பி.எஸ்.என்.எல். சார்பில் மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) நாகர்கோவில் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, பி.எஸ்.என்.எல். மாவட்டப் பொதுமேலாளர் சஜூகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தரைவழி இணைப்புகளுக்கு கட்டணம் நிலுவை காரணத்தால் இணைப்புகள் துண்டிக்கப் பட்டுள்ள ஆரல்வாய்மொழி, அழகப்பபுரம் , பூதப்பாண்டி , ஈத்தாமொழி , இரவிபுதூர் , கீரிப்பாறை , கோட்டாறு, நாகர்கோவில் , கன்னியாகுமரி , ராமன்புதூர் , இராமபுரம் , சுவாமிதோப்பு , தடிக்காரன்கோணம் , தெங்கம்புதூர் , வடசேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் விதிகளுக்கு உள்பட்டு உரிய தள்ளுபடி பெற்று, நிலுவைத் தொகையை தீர்வு காணுவதற்கும் தேவையெனில் மறு இணைப்பு பெற்று கொள்ளும் வகையிலும் லோக் அதாலத் முகாம் நாகர்கோவில் நீதி மன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பின் மூலம் பயன்பெறலாம். நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனில் சட்டப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








