பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!
/

குமரியில் மத்தியக் குழு ஆய்வுக் கூட்டம்

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்த  ஆய்வுக் குழுக் கூட்டம்  கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமைநடடைபெற்றது. 

Updated On :23 ஜனவரி 2019, 5:53 am IST

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்த  ஆய்வுக் குழுக் கூட்டம்  கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமைநடடைபெற்றது. 
மத்திய அரசு அலுவலகங்களில் அதிகார்வபூர்வ மொழியாக இந்தி மொழி உள்ளது. இந்தி மொழியை மத்திய அரசு ஊழியர்கள் எந்த அளவுக்கு பேசவும் ,எழுதவும் பயன்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்ய எ.ம்பி.க்கள் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. 
இந்தக்குழு மாவட்ட வாரியாக மத்திய அரசு அலுவலக அதிகாரிகளை சந்தித்து இந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வு செய்து மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இக் குழுவின் ஆய்வுக் கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இக்குழுவில்,  குக்கும் தேவ் நாராயண் யாதவ் (பிகார் ), டாக்டர் அம்மியாக்னிக் (குஜராத் ), சம்பத் (கேரளம் ) ஆகிய 3 எம் பி க்கள் கலந்து கொண்டனர்.  இந்தக் குழு ஆய்வு செய்து விரைவில் மத்திய அரசுக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கிறது.  இதில் சிண்டிகேட் வங்கி பொதுமேலாளர் குமரய்யா, மண்டல மேலாளர் அழகர்சாமி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.