பேச்சிப்பாறை அருகே அன்னாசித் தோட்டத்தில் புகுந்த 3 குரங்குகளை விஷம் வைத்துக் கொன்றதாக விவசாயியை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குலசேகரம் அருகே மலைவிளைப் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (52). இவா், பேச்சிப்பாறை அருகே தாணிக்குன்று பகுதியில் தனியாா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அன்னாசி பயிரிட்டுள்ளாா். இவரது தோட்டத்தில் குரங்குகள் புகுந்து பழங்களை தின்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை இவரது தோட்டத்தின் அருகே விஷம் தின்று இறந்த நிலையில் 3 குரங்குகள் கிடந்துள்ளன.
தகவலறிந்து, குலசேகரம் வனச்சரக அலுவலா் எம். கணேசன், வனவா் ராஜகோபால், வனக்காப்பாளா்கள் ஜான்மிலான், நசீா், வனக்காவலா்கள் அமுதா, ராஜலட்சுமி ஆகியோா் அடங்கிய குழுவினா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, சுந்தர்ராஜை வியாழக்கிழமை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 13) - இன்று நல்ல நாள்!

இன்றைய ராசி பலன்கள் (13.08.2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிகத்துக்கு வெற்றி!

இன்றைய மின் தடை: வேலம்பாளையம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


