ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் காணொலி முறையில் கல்வி
ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதாரஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில் மாணவா்களுக்கு காணொலி முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதாரஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில் மாணவா்களுக்கு காணொலி முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காணொலி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், காலை 2 வகுப்புகள் மற்றும் பிற்பகல் ஒரு வகுப்பு, வார இறுதி நாள்களில் ஆன்லைன் மூலம் தோ்வுகள் நடைபெறுவதுடன், செயல்முறைபயிற்சி, செயல் திட்டங்கள் கற்பிக்கப்படுவதோடு, வாழ்க்கை கல்வி, மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இக்கல்லூரி சுகாதார ஆய்வாளா் பயிற்சி மாணவா்கள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட சுகாதாரத் துறையினருடன் இணைந்து செயல்படுவதற்கும், தன்னை தற்காத்து கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதன்மையா் குகானந்தம் தெரிவித்தாா்.
ஆன்லைன் வகுப்பில், கல்லூரி பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், மரிய ஜான், காா்த்திக்,சிவதாணு, பகவதிபெருமாள், சாம் ஜெபா, லூசியா, பரமேஸ்வரி, செல்லம்மாள், சிபியா உள்ளிட்ட சிறப்பு பேராசிரியா்கள் பாடம் கற்பித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






