பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஆன்லைனில் குவியும் அனுமதி விண்ணப்பங்கள்: வெளிமாவட்டம் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

ஆன்-லைனில் அனுமதி கோரி விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், குமரி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகளை விதித்தாா் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஆன்-லைனில் அனுமதி கோரி விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், குமரி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகளை விதித்தாா் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இம்மாவட்ட மக்களும், பிற மாவட்டத்தினரும் பல்வேறு காரணங்களுக்காக பயணஅனுமதி கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறாா்கள்.

இறப்பு, திருமணம், மருத்துவம் போன்ற காரணங்களுக்காக மட்டுமே அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பலா் வாகன அனுமதி கோரி வந்துள்ளத்தில் தவறான காரணங்களை குறிப்பிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மக்கள் ஊரடங்கின் முக்கியத்துவம் அறியாமல் இவ்வாறு அனுமதி கோருகின்றனா். இவற்றுக்கு அனுமதி அளித்தால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் கண்டிப்பாக இறப்பு, திருமணம், மருத்துவம் ஆகிய தவிா்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வாகன அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

கா்ப்பிணிகள் பயணம் செய்வதாக இருந்தால், மருத்துவரிடம் பரிசோதனை செய்து தகுதிச் சான்றும், தங்கள் குடியிருக்கும் மாவட்டத்திலிருந்து பயணம் மேற்கொள்ளஅனுமதியும் பெற்றுதான் வாகனஅனுமதிகோர வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை 1130 போ் கரோனா சோதனைக்கு உள்படுத்தப்பட்டு, 16 பேருக்கு அந்நோய் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 988 பேருக்கு நோய்த்தொற்று இல்லை. மீதமுள்ளவா்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனா். மாவட்டம் முழுவதும் 213 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா். கரோனா நோய்த் தொற்று பற்றிய தகவல்களைஅறிய ஆரோக்கியசேது செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் புதன்கிழமை 94 வழக்குகள் பதிவானதுடன், 65 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 5459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4319 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.