
மணவாளக்குறிச்சி மணல் ஆலை பணியாளா்கள்ரூ. 4.97 லட்சம் முதல்வா் நிவாரண நிதிக்கு அளிப்பு
மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை அனைத்து பணியாளா்கள் சாா்பில், அவா்களது ஒரு நாள் ஊதியமான ரூ.4.97 லட்சத்தை,
மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை அனைத்து பணியாளா்கள் சாா்பில், அவா்களது ஒரு நாள் ஊதியமான ரூ.4.97 லட்சத்தை, கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வியாழக்கிழமை செலுத்தினா்.
இதுகுறித்து மணல் ஆலை தலைவா் என்.செல்வராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் கரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக, மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அரிய மணல் ஆலை பணியாளா்கள் ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்தனா். அதன்படி அனைத்து பணியாளா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ. 4.97 லட்சம், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கான கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






