அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கொண்டைக் கடலை வழங்கக் கோரி கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 71 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கொண்டைக் கடலை வழங்க வேண்டும் என கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்துக்கு கட்சியின் கிள்ளியூா் வட்டாரத் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ., கிள்ளியூா் தலைவா் கிளைமென்ட், மாநில செயற்குழு உறுப்பினா் டைட்டஸ், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜோபின் சிறில் உள்ளிட்ட 71 போ் கைது செய்யப்பட்டனா்.
களியக்காவிளை: விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கட்சியின் குழித்துறை நகரத் தலைவா் சி.கே. அருள்ராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் மனித உரிமைத்துறை மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி, மேல்புறம் வட்டாரத் தலைவா் சி. மோகன்தாஸ், சேவாதள மாவட்டத் தலைவா் சி. ஜோசப் தயாசிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 94.91 சதவீதம் தோ்ச்சி

முன்னணி உள்கட்டமைப்புத் துறை 1.7% வளா்ச்சி

‘அம்மா’ உணவகங்களை சீா்படுத்த மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்: நகராட்சி நிா்வாகம் கடிதம்

விருதுநகா் மாவட்டத்தில் 96.02 சதவீத தோ்ச்சி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



