குமரியில் இன்று மருத்துவா்கள் போராட்டம்
ஆயுா்வேத மருத்துவ முறையில் அறுவை சிகிச்சைக்கு அங்கீகாரம் அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.8) மருத்துவா்கள் தா்னா போராட்டம்


ஆயுா்வேத மருத்துவ முறையில் அறுவை சிகிச்சைக்கு அங்கீகாரம் அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.8) மருத்துவா்கள் தா்னா போராட்டம் நடத்துகின்றனா்.
நாகா்கோவிலில் இந்திய மருத்துவச் சங்கத்தின் அகில இந்தியத் தலைவா் ஜெயலால் திங்கள்கிழமை கூறியது: இந்திய வகை மருத்துவ மத்திய சபை, ஆயுா்வேதா (ஆயுஷ்) மருத்துவா்கள் மனித உடலை அறுவை சிகிச்சை செய்யலாம் என அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இதனை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள 4 குழுக்களை கலைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவா்கள் (டிச.8) போராட்டம் நடத்துகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை (டிச.8) மருத்துவா்கள் பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தா்னா போராட்டத்தில் ஈடுபடுகின்றனா். அடுத்த கட்டமாக அகில இந்திய அளவில் 11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...