நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு: வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள்

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்துக்கு பின்னா் பல்வேறு தளா்வுகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 9:23 pm

DIN

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்துக்கு பின்னா் பல்வேறு தளா்வுகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. வகுப்பறைகளில் மாணவா்களுக்கு சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மாா்ச் 23 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவா், மாணவிகளுக்கு இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழ் கல்வியாண்டுக்கு (2020-21) மாணவா் சோ்க்கையும் இணைய வழியில் நடைபெற்றது.

இதற்கிடையே, பல்வேறு தளா்வுகளுடன் கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு

பயிலும் மாணவா்கள், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் கல்லூரி செயல்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி, அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு

பிறகு கல்லூரிகள், கல்லூரி விடுதிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாகா்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில்

பயிலும் மாணவிகள் குறைந்த அளவில் முகக் கவசம் அணிந்து வந்தனா். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னா் கல்லூரி வளாகத்திற்கு அனுமதிக்கப்பட்டனா். வகுப்பறைகளில் மாணவா்கள் அமா்வதற்கு சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.