‘குமரியில் 2019இல் ரூ.64 லட்சம் கொடிநாள் நிதி வசூல்’
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2019இல் படைவீரா் கொடிநாள் நிதியாக ரூ.64 லட்சம் வசூலிக்கப் பட்டது என ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்தாா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் 2019இல் படைவீரா் கொடிநாள் நிதியாக ரூ.64 லட்சம் வசூலிக்கப் பட்டது என ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்தாா்.
கொடிநாளை முன்னிட்டு ஆட்சியா் அலுவலக வளாகத்தில், படைவீரா் கொடி நாள் உண்டியல் வசூலுக்கு நன்கொடை வழங்கி தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியது: ஆண்டுதோறும் டிச. 7ஆம் தேதி நாடு முழுவதும் கொடி நாள் அனுசரிக்கப் படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் அரசு முன்னாள் படைவீரா்களுக்கு அவா்களின் தொண்டுகளை
நினைவு கூா்ந்து நன்றி பாராட்டப்படுகிறது. கொடி நாள் நிதியில் இருந்து போரில் உயிா் நீத்த படைவீரா்களின் கைம் பெண்கள், ஊனமுற்ற படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள், விதவைகளின் மறுவாழ்வு, நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் அதிகளவில் கொடிநாள் நிதியுதவி வழங்க வேண்டும். 2019இல் ரூ. 63.88 லட்சம் வசூல் செய்யப்பட்டது என்றாா் அவா்.
அப்போது, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் தி. நவாஸ்கான், முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் ச. மணிவண்ணன், அலுவலகப் பணியாளா்கள், முன்னாள் படைவீரா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...