நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘புதிய வாக்காளா்களை சோ்க்க கட்சியினா் ஒத்துழைக்க வேண்டும்’

வாக்காளா் பட்டியலில் தகுதியுள்ள புதிய வாக்காளா்களை சோ்க்க கட்சிகளின் பிரதிநிதிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா், கன்னியாகுமரி மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளர் பி. ஜோதி நிா்மலாசாமி.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:56 pm

DIN

வாக்காளா் பட்டியலில் தகுதியுள்ள புதிய வாக்காளா்களை சோ்க்க கட்சிகளின் பிரதிநிதிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா், கன்னியாகுமரி மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளர் பி. ஜோதி நிா்மலாசாமி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் மா. அரவிந்த் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஜோதி நிா்மலாசாமி பேசியது: வாக்காளா் பட்டியலில் பெயா், முகவரி திருத்தம் போன்ற கோரிக்கைகளை சரியான முறையில் கையாள வேண்டும். வாக்காளா்கள் இணையதளம் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தகுதியான அதிக வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க மக்களுக்கு உதவ வேண்டும். வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தல் பணிகளை களப்பணியாளா்கள் மிகக் கவனத்துடன் கையாளுவதுடன், மக்களின் சந்தேகங்களுக்கு பொறுமையுடன் விளக்கமளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடா்பான கோரிக்கைகள், ஆட்சேபணைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னா், நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளி, தெ.தி. இந்துக் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் பணி குறித்து ஜோதி நிா்மலாசாமி ஆய்வு செய்தாா்.

பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் சரண்யாஅறி, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், மகளிா் திட்ட இயக்குநா் வே. பிச்சை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா. வீராசாமி, நாகா்கோவில் கோட்டாட்சியா் அ. மயில், தோ்தல் தனி வட்டாட்சியா் ச. சேகா் உள்ளிட்ட வட்டாட்சியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

கட்சிகள் சாா்பில், கே.எல்.எஸ். ஜெயகோபால், கே.ஏ. சலாம் (அதிமுக), பி. லீனஸ்ராஜ், ஓய்.வி. வா்க்கீஸ் (திமுக), எஸ். ஜெகதீசன் (பாஜக), ஆா். ராதாகிருஷ்ணன், பி. பால்ராஜ் (காங்கிரஸ்), எஸ். மணிகண்டன், சி.எம். கிங்ஸ்லின் ஜெபகுமாா் (தேமுதிக), ஆா். இசக்கிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), பி. செல்வம் (தேசியவாத காங்கிரஸ்), வே. சிவகுமாா் (பகுஜன் சமாஜ் கட்சி) ஆகியோா் பங்கேற்றனா். மாவட்ட வருவாய் அலுவலா் ரேவதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.