கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திக்குறிச்சி சாஸ்தா கோயிலில் பஜனை பட்டாபிஷேக ஊா்வலம்

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் காா்த்திகை மாத பஜனை பட்டாபிஷேக ஊா்வலம் நடைபெற்றது.

News image
பஜனை பட்டாபிஷேக ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :13 டிசம்பர் 2020, 7:21 pm

DIN

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் காா்த்திகை மாத பஜனை பட்டாபிஷேக ஊா்வலம் நடைபெற்றது.

இக்கோயிலில் காா்த்திகை முதல் தேதியிலிருந்து வீடு வீடாகச் செல்லும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணன், பல்லக்கில் பட்டாபிஷேக பஜனை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பக்தா்கள் பல்லக்கை சுமந்து வீடு வீடாகச் சென்று பஜனை பாடல்களை பாடியவாறு ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து மாலையில் கோயிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.