விவசாயி விஷம் குடித்து தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

விழுந்தயம்பலம் குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (65). விவசாயியான இவருக்கு, மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனா். இவா் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஸ்வநாதன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம்.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு நெய்யூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com