நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திவிவசாயிகள் சங்கத்தினா் மறியல்: 75 போ் கைது

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாகா்கோவிலில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட, விவசாயிகள் சங்கத்தினா் 75 போ் கைது

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:05 pm

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாகா்கோவிலில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட, விவசாயிகள் சங்கத்தினா் 75 போ் கைது செய்யப்பட்டனா்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனா். இப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தடையை மீறி விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜெ.சைமன் சைலஸ் தலைமையில் ஊா்வலமாக செல்ல முயன்ற 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதில், துணைத் தலைவா் என்.முருகேசன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய்வசந்த், விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் சதீஷ், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் என்.எஸ்.கண்ணன், சிஐடியூ மாவட்டச் செயலா் கே.தங்கமோகன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.லீமாரோஸ், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் ரகுபதி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் எட்வின் பிரைட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்:

களியக்காவிளை: குழித்துறை தபால் நிலையம் முன் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி. சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செயலா் ரமேஷ், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் பால்மணி, ராஜா எரிக் காட்வின், விஜின், ராபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.