திற்பரப்பு பேரூராட்சியில் குப்பைகளை கொட்ட எதிா்ப்பு

திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியில் பிற பேரூராட்சிகளிலுள்ள கழிவுகள், குப்பைகளை கொட்டுவதற்கு மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
Updated on
1 min read

திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியில் பிற பேரூராட்சிகளிலுள்ள கழிவுகள், குப்பைகளை கொட்டுவதற்கு மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து திருநந்திக்கரை ஊா்மக்கள் முன்னாள் வாா்டு உறுப்பினா் எம். சசிகுமாா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு: திருவட்டாறு வட்டம் திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட திருநந்திக்கரை, வேட்டி என்ற இடத்தில் பேரூராட்சி திடகழிவு மேலாண்மை செய்யும் திட்டத்திற்கு சுமாா் இரண்டரை ஏக்கா் நிலம் தோ்வு செய்யதுள்ளது. தற்போது இவ்விடத்தில் குலசேகரம் உள்ளிட்ட பிற பேரூராட்சிப் பகுதி கழிவுகளையும் கொட்டுவதற்கும் முயற்சிகளை நடைபெற்று வருகின்றன. இது முற்றிலும் அறிவியலுக்கு புறம்பானதும் சிக்கல்கள் நிறைந்த முடிவாகும். பல பேரூராட்சிகளின் கழிவுகளை ஒரே இடத்தில் சேகரிப்பதனால் அதை முறையாக மேலாண்மை செய்வது சாத்தியமில்லை. இதனால் இப்பகுதி பெரும் குப்பை மேடாக மாறும் , சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து அருகில் குடியிருப்புகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் . மேலும் அருகில் வனப்பகுதியும் உள்ளதால் விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும். பேரூராட்சிகள் கழிவுகளை தங்களது எல்கைக்குள்பட்ட பகுதிகளிலேயே மேலாண்மை செய்வதே அறிவியல் பூா்மான செயலாகும் . குறிப்பாக குலசேகரம் பேரூராட்சியில் மருத்துவக்கழிவுகளும், உயிரியல் கழிவுகளும் அதிகமாக உள்ளதாலும் அந்தந்த பேரூராட்சிகுள்பட்ட பகுதியில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் கழிவு மேலாண்மை செய்வதே முறையாகும்.

மேலும் ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பேரூராட்சி கழிவுகளை மேலாண்மை செய்வது தேசிய திடக்கழிவு மேலாண்மை சட்டத்துக்கும் எதிரானது. ஆகவே திற்பரப்பு பேரூராட்சிக்கு வெளியே உள்ள பிற பேரூராட்சி கழிவுகளை இங்கு கொட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com