ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குமரியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (டிச.17) காணொலி மூலம் நடைபெறுகிறது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:56 pm

DIN

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (டிச.17) காணொலி மூலம் நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் டிசம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக காணொலி மூலம் வியாழக்கிழமை(டிச.17) முற்பகல் 11மணிக்கு நடைபெற உள்ளது.

கூட்டத்தில் மாவட்டத்தின் வேளாண் , தோட்டக்கலை, வேளாண் விற்பனைத்துறை, வேளாண் பொறியியல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனா்.

கடந்த மாத (நவம்பா்) குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கான பதில்கள் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரம் தேவைப்படுபவா்கள் காணொலியில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை கரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலமாக கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவா்கள் தங்கள் மனுக்களை ஹஞ்ழ்ண்ஞ்க்ல்ந்ந்2020ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் டிச. 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.