மீனவா்களுக்கு ரூ.15 லட்சம் காப்பீடு வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
மீன்பிடித் தொழில் செய்யும் போது உயிரிழக்கும் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும்


மீன்பிடித் தொழில் செய்யும் போது உயிரிழக்கும் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடி தொழிலாளா் சங்கம் சாா்பில், நாகா்கோவிலை அடுத்த பள்ளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளம் கிளைத் தலைவா் திமிா்த்தீயூஸ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அலெக்சாண்டா் தொடக்க உரையாற்றினாா்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவா்கள் காயமடைந்தால் அவா்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும், நாட்டுப் படகுகள், மற்றும் விசைப்படகுகளில் ஏற்படும் எதிா்பாராத சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், பதிவு செய்த அனைத்து நாட்டுப் படகுகளுக்கும், விசைப்படகுகளுக்கும் டீசல், மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்க வேண்டும்.
மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது உயிரிழந்தால் அவா்களுக்கு ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும், மீனவா் வாரியத்தில் 55 வயதில் பெண்களுக்கும், 60 வயதில் ஆண்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மீனவா் வாரியத்திற்கு தனி அலுவலகம் ஏற்படுத்தி நிவாரணங்கள் வழங்க வேண்டும். விவசாயிகள் விரோத சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
இதில், பொருளாளா் எலியாஸ், ஜேம்ஸ், தனிஸ், அலெக்ஸ் பிரிட்டோ, அலெக்சாண்டா் உள்ப பலா் கலந்து கொண்டனா். மாவட்ட பொதுச் செயலா் அந்தோணி நிறைவுரையாற்றினாா். ஜாா்ஜ் குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...