ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

களியக்காவிளை அருகே வீட்டில் நகை திருட்டு

களியக்காவிளை அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 7:29 pm

DIN

களியக்காவிளை: களியக்காவிளை அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு ராகவன்பிள்ளை மகன் சதீஷ்குமாா் (47). இவரது மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் கடந்த சில நாள்களாக வீடு பூட்டப்பட்டிருந்ததாம். இந்நிலையில், சனிக்கிழமை அவா் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வீட்டினுள் சென்று பாா்த்த போது அங்கிருந்த அலமாரி உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக்கிடந்தன. மேலும் அங்கு வைத்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல், மோதிரம் உள்பட நாலே கால் பவுன் (4.25 பவுன்) நகைகள் திருடு போனது தெரியவந்ததாம்.

இது குறித்து சதீஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.