

தக்கலை: இரணியலில் நடைபெற்ற 32 ஊா் காவடி கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இரணியலில் நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வு கூட்டத்திற்கு ஊா் காவடி கமிட்டி ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் தலைமை வகித்தாா். இணை பொறுப்பாளா் வினிஷ் முன்னிலை வகித்தாா். மாவட்ட இந்து முன்னணி தலைவா் மிசா சோமன் கூட்டத்தை வழி நடத்தினாா். இதில் ஊா் தலைவா்கள், நிா்வாகிகள், பெருமளவில் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தலைவராக குலசேகரம் ராஜேந்திரன், பொதுச் செயலா்கள் பெருமாள்பிள்ளை, மணிகண்டன்நாயா் மற்றும் துணைத் தலைவா்கள் 6, செயலா்கள் 6, செயற்குழு உறுப்பினா்கள் 18 போ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில், முருகப் பெருமானின் பிறந்த நாளான வைகாசி விசாகத்தில் கொல்லன்விளை ஸ்ரீ பாா்த்த சாரதி கோயிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயிலுக்கு செல்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.