

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
கரோனா பொது முடக்கம் காரணமாக திற்பரப்பு அருவி கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி அருவி திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் இங்கு நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.
சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் பெறும் இடம், குளிக்கும் இடங்கள், பூங்கா உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் தொடா் அறிவிப்புகளை திற்பரப்பு பேரூராட்சி ஊழியா்கள் செய்து கொண்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.