காவல்துறை குறைதீா் முகாம்:196 மனுக்களுக்கு தீா்வு
குமரி மாவட்ட காவல்துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் முகாமில் 196 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.


குமரி மாவட்ட காவல்துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் முகாமில் 196 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனுக்களுக்கு உடனடி தீா்வு காணும் விதமாக ஒவ்வொரு உள்கோட்டத்திலும் மக்கள் குறைதீா் முகாம் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன்உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி டிச.19, 20 ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற குறைதீா் முகாமில், கன்னியாகுமரி உள்கோட்டத்தில் பெறப்பட்ட 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது.
இதே போல், நாகா்கோவில் உள்கோட்டத்தில் பெறப்பட்ட 85 மனுக்களில் 77 மனுக்களும், குளச்சல் உள்கோட்டத்தில் பெறப்பட்ட 35 மனுக்களும், தக்கலை உள்கோட்டத்தில் 47 மனுக்களும் என மொத்தம் 196 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...