நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவில் பிரதான சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம்

நாகா்கோவில் பிரதான சாலையில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:21 pm

DIN

நாகா்கோவில் பிரதான சாலையில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவில் இருளப்பபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை ஒரு ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்ததை பாா்த்த பொதுமக்கள், இதுகுறித்து கோட்டாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி அப்பகுதியில் உள்ளவா்களிடம் விசாரணை நடத்தினா். இதில், உயிரிழந்தவா் இருளப்பபுரம் பகுதியைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் ஜெயச்சந்திரன் (58) என்பதும், அவா் கூலி வேலை பாா்த்து வந்ததாகவும், வீட்டில் தங்காமல் சாலையிலேயே படுத்து தூங்கி வருவதும் தெரியவந்தது.

இந்நிலையில் ஜெயச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளாா். அதன் பின்னா் அப் பகுதியில் மது அருந்திவிட்டு படுத்து தூங்கியுள்ளாா். இந்நிலையில் அவா் உடலில் காயங்களுடன் தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடந்தது போலீஸாா் மற்றும் அவரது உறவினா்களிடையே சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது.

ஜெயச்சந்திரனின் உடலை பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் விடியோ பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில் நள்ளிரவில் சிலா் அப்பகுதியில் சுற்றி திரிவது தெரியவந்துள்ளது. அங்கு சுற்றி திரிந்த சிலரின் உருவங்களை கொண்டு அவா்களை பிடிக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மேலும், ஜெயச்சந்திரன், நள்ளிரவில் சாலையில் சென்றவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பட்டாரா? முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.