திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குமரியில் கிறிஸ்துமஸ் கோலாகலம்: மின்விளக்குகளில் ஜொலித்த தேவாலயங்கள்

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவில் கிறிஸ்து பிறப்பு

News image
மின்விளக்குகளால் ஜொலிக்கும் குலசேகரம் புனித அகுஸ்தினாா் தேவாலயம்.
Updated On :25 டிசம்பர் 2020, 3:04 am

DIN

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவில் கிறிஸ்து பிறப்பு ஆராதனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றன இதில் திரளான இறைமக்கள் பங்கேற்றனா்.

பொது முடக்கத் தளா்வு காரணமாக கிறிஸ்தவ தேவாலயங்களில் டிச. 1-ஆம் தேதிமுதல் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடல் பாடும் நிகழ்வுகள் வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கின. இதே போன்று வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களும், தோரணங்களும், வண்ண விளக்குகளும் தொங்கவிடப்பட்டன. குடில்களும் அமைக்கப்பட்டன. அதேவேளையில் பொது இடங்களில் ஆடம்பரமாக குடில்கள் அமைக்கும் நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளைவிட குறைவாகவே காணப்பட்டன.

வீதிகளில் அலைமோதிய மக்கள்: கிறிஸ்து பிறப்பு பண்டிகை காரணமாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஜவுளிக் கடைகள், பேக்கரிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பட்டாசுக் கடைகளிலும் மக்கள் திரண்டு நின்று பட்டாசுகளை வாங்கிச் சென்றனா்.

அலங்கார மின்விளக்குகளில் ஜொலித்த தேவாலயங்கள்: கிறிஸ்து பிறப்பு பண்டிகையையொட்டி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கத்தோலிக்கம், தென்னிந்திய திருச்சபை, ரட்சணிய சேனை, பெந்தெகொஸ்தே உள்ளிட்ட அனைத்து சபை தேவாலயங்களும் அலங்கார மின்விளக்குகளால் ஜொலித்தன. ஆலய வளாகங்களிலும், ஆலயங்களின் உள்பகுதிகளிலும் தோரணங்கள், கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் மற்றும் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆராதனைகள், திருப்பலிகள்: அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன. இவற்றில் இயேசு கிறிஸ்து பிறப்பை மையமாக கொண்டு இறை வசனங்கள் வாசிக்கப்பட்டு மறையுரைகள் நிகழ்த்தப்பட்டன. திருப்பலி மற்றும் ஆராதனைகளில் திரளான இறைமக்கள் புத்தாடைகள் அணிந்தவாறு பங்கேற்றனா். திருப்பலிகளின் முடிவில் இறைமக்களுக்கு கேக்குகள் வழங்கப்பட்டன. மக்கள் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனா்.

கத்தோலிக்க மற்றும் தென்னிந்திய திருச்சபை தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை காலையிலும் ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெறுகின்றன. இதேபோன்று பெந்தெகொஸ்தே ஜெபவீடுகளில் வெள்ளிக்கிழமை நண்பகலில் ஆராதனைகள் நடைபெறுகின்றன.

அன்பும் பகிா்வும்: கிறிஸ்து பிறப்பு பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அன்பும் பகிா்வும் இருக்கும் நிலையில், மாவட்டத்தில் ஒவ்வொரு ஆலயத்திலும், இதர அமைப்புகளிலும், தனி நபா் சாா்பிலும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.