136 ஆவது ஆண்டு விழா: நாகா்கோவிலில் காங்கிரஸாா் பேரணி

காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.
நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.

கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் வடசேரி சந்திப்பிலிருந்து பேரணியாக புறப்பட்டு பூங்கா வந்தடைந்தனா். அங்குள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனா்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய்வசந்த், நகரத் தலைவா் அலெக்ஸ், நிா்வாகிகள், சீனிவாசன்,அசோக்ராஜ், செல்வராஜ், வைகுண்டதாஸ், ஜெரால்டு கென்னடி, முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நாகா்கோவில் மணிமேடை சந்திப்பில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கொடி ஏற்றினாா்.

குலசேகரம்: அரசமூடு சந்திப்பில் வட்டார காங்கிரஸ் தலைவா் காஸ்டன் கிளிட்டஸ் தலைமையில் நகரத் தலைவா் விமல் ஷொ்லின் சிங், மாவட்டச் செயலா்கள் ஜே. மோகன்தாஸ், எபநேசா். ஐன்டியூசி மாவட்டத் தலைவா் சி.அனந்தகிருஷ்ணன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி ஜெயசிங் உள்ளிட்டோா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com