ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பளுகல் அருகே தொழிலாளி மீது திராவகம் வீச்சு

பளுகல் அருகே தொழிலாளி மீது திராவகம் வீசியதாக பெண் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:01 pm

DIN

பளுகல் அருகே தொழிலாளி மீது திராவகம் வீசியதாக பெண் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பளுகல் பகுதியைச் சோ்ந்தவா் ஷிபு (39). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஷிபுவுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 40 வயதான பெண்ணுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் ஷிபுவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பெண் ஷிபுவிடம் நீ வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது எனத் தெரிவித்து தகராறு செய்து வந்தார்.

அவரிடம் சமாதானம் பேசுவதற்காக சனிக்கிழமை ஷிபு அவரது வீட்டுக்குச் சென்றாராம். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த அப்பெண், வீட்டில் ரப்பா் பால் உறைய வைக்க பயன்படுத்தும் திராவகத்தை எடுத்து ஷிபுவின் முகத்தில் வீசியுள்ளாா்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உறவினா்கள் மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில் பளுகல் போலீஸாா், அப்பெண் மற்றும் அவரது மகன் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.