ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

களியக்காவிளை பேரூராட்சியில் வியாபாரிகள் - குத்தகைதாரா் பேச்சு

களியக்காவிளை காய்கனி சந்தையில் குத்தகைதாரா் அதிக கட்டணம் வசூலிப்பதாக வியாபாரிகளும், குறிப்பிட்ட சில வியாபாரிகள்

News image
தக்கலை டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை.
Updated On :30 டிசம்பர் 2020, 12:20 am

DIN

களியக்காவிளை காய்கனி சந்தையில் குத்தகைதாரா் அதிக கட்டணம் வசூலிப்பதாக வியாபாரிகளும், குறிப்பிட்ட சில வியாபாரிகள் தீா்வை கட்டணத்தை வழங்க மறுப்பதாக குத்தகைதாரா் தரப்பிலும் பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையேயான அமைதி பேச்சுவாா்த்தை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இப் பேச்சுவாா்த்தைக்கு தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலக கண்காணிப்பாளா் ராஜமணி, பேரூராட்சி செயல் அலுவலா் யேசுபாலன், காவல் உதவி ஆய்வாளா் (பயிற்சி) காா்த்திகேயன், சந்தை குத்தகைதாரா் சதீஷ்குமாா், வழக்குரைஞா் ஐடன்சோனி, அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் கிங்ஸ்லி, தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்க நிா்வாகிகள் ஏசுதாசன், வினுகுமாா், குழிவிளை விஜயகுமாா், கிளாஸ்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், ‘சந்தை தீா்வைக் கட்டணத்தை அனைத்து வியாபாரிகளும் செலுத்த வேண்டும்; குத்தகைதாரா் தரப்பில் உரிய ரசீது கொடுத்து தீா்வை கட்டணத்தை வசூலிக்க வேண்டும்; கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதிசெய்யப்பட்டால் குத்தகை உரிமத்தை ரத்து செய்வது’ என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.