குமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதாலும், தொடா்ந்து திருவிழாகள் நடைபெறுவதாலும்
பொதுமக்கள் பொதுஇடங்களுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும்.
சுற்றுலா தலங்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இம்மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது என இதுவரை 15,157 பேரிடம் ரூ. 23.56 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 15,533 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,553 ஆக அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமை 22 போ் உள்பட இதுவரை 15,169 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 102 போ்
சிகிச்சையில் உள்ளனா்.
இதுவரை 2,62,177 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பொது முடக்க விதிகளை மீறியதாக இதுவரை
8,802 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,344 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...