நவ. 26இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை (நவ. 26) நடைபெறுகிறது.


கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை (நவ. 26) நடைபெறுகிறது.
இது குறித்து ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட நவம்பா் மாத விவசாயிகள்
குறை தீா் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 26) காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில்
முந்தைய கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கப்படும்.
விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை கரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தெரிவிக்கலாம். விவசாயம் தொடா்பான கோரிக்கை மனுக்களை அந்தந்த வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளித்து பயனடையலாம்.
கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவா்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஹஞ்ழ்ண்ஞ்க்ல்ந்ந்2020ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் நவ.26 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...