நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி மாவட்டத்தில் மேலும் 2 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அரசு கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 2 ஆம்புலன்ஸ்களின் சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:37 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அரசு கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 2 ஆம்புலன்ஸ்களின் சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வசதிக்காக கூடுதலாக ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு கூடுதலாக 2 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை போன்ற பகுதிகள் மலையும், மலை சாா்ந்த பகுதியாகவும், சுற்றுலாத் தலமாகவும் இருப்பதாலும் அங்கு

வசிக்கும் மலைவாழ் மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பயன்பெறும் வகையில் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மா. அரவிந்த் முன்னிலை வகித்தாா். இதில், என்.சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆவின் தலைவா் எஸ்.ஏ. அசோகன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஏ. பிரகலாதன், துணை இயக்குநா், போஸ்கோராஜ், அறங்காவலா் குழு உறுப்பினா் எம்.ஜெயசந்திரன், 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளா் ரஞ்சித் விஸ்வநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெபின் கிங்ஸ்டன் ராஜ், வி. டாரதி சாம்சன், வழக்குரைஞா் கே.எல்.எஸ்.ஜெயகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.