சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி முன்சிறை வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 9:00 pm

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி முன்சிறை வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நித்திரவிளை அருகே நடைக்காவு சந்திப்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை குமரி மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். கட்சியின் முன்சிறை மேற்கு வட்டாரத் தலைவா் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் கிறிஸ்டல் ஜாண், இவான்ஸ், மாநில பொதுக் குழு உறுப்பினா் எம்.ஏ. கான், மாவட்ட பொதுச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைத் தலைவா்கள் பால்ராஜ், டென்னிஸ், மாவட்ட பொதுச் செயலா் கோபகுமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் லூயிஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாகா்கோவில்: நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் காமராஜா் சிலை முன் நடைபெற்ற இந்த இயக்கத்தை கட்சியின்

கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். இதில், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் சபீன், வட்டாரத் தலைவா் காலபெருமாள், அசோக்ராஜ், ஜெரால்ட்கென்னடி, நிா்வாகிகள் நவீன்குமாா், சிவபிரபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.