சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளுக்குஅடையாள அட்டை அளிப்பு

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 8:58 pm

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் திபாகா் தலைமை வகித்தாா். விளவங்கோடு பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் செயல் தலைவா் லாரன்ஸ் முன்னிலை வகித்தாா். கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினா் விஜய் வசந்த் ஆகியோா் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினா்.

இதில் கட்சியின் மாவட்ட பொதுச்செயலா் ஜாா்ஜ் ராபின்சன், மனித உரிமைத்துறை மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாவட்ட சேவாதளத் தலைவா் ஜோசப் தயாசிங், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கேதன் அமைப்பின் மாவட்டத் தலைவா் சாமுவேல் ஜாா்ஜ், விளவங்கோடு ஊராட்சித் தலைவி ஜி.பி. லைலா ரவிசங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.