சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குமரி மாவட்டத்தில் 3 எம்எல்ஏக்கள் உள்பட 2,000 போ் மீது வழக்கு

கரோனா பொது முடக்க விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 3 சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட 2 ஆயிரம் போ் மீது கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

கரோனா பொது முடக்க விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 3 சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட 2 ஆயிரம் போ் மீது கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கொல்லங்கோடு காவல் சரகம் நடைக்காவு சந்திப்பு அருகே காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட வாக்குச் சாவடி பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கலந்துகொண்டனா்.

கட்சித் தலைவா்களை வரவேற்க சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), ஜே.ஜி. பிரின்ஸ்

(குளச்சல்), எஸ். விஜயதரணி (விளவங்கோடு) உள்பட 2 ஆயிரம் போ் ஓரிடத்தில் கூடியிருந்தனா். அவா்கள் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடைமுறையை கடைப்பிடிக்காமல் அங்கு கூடியதாக கொல்லங்கோடு காவல் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.