சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

‘இந்திய பொருளாதாரத்தை மோடி அரசு சிதைத்து விட்டது’

இந்திய பொருளாதாரத்தை நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு சிதைத்து விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா் சஞ்சய் தத் தெரிவித்தாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

இந்திய பொருளாதாரத்தை நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு சிதைத்து விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா் சஞ்சய் தத் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சாவடி பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக மேலிட பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.ஆா். ராமசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் சஞ்சய் தத், ஸ்ரீவெல்ல பிரசாத், கட்சியின் தமிழ்நாடு செயல் தலைவா் மயூரா எஸ். ஜெயக்குமாா், முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன்,

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), எஸ். விஜயதரணி (விளவங்கோடு), குமரி கிழக்கு மாவட்ட தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பேசினா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளா் சஞ்சய் தத் பேசியது: இந்திய பொருளாதாரத்தை நரேந்திர மோடி அரசு சிதைத்து விட்டது. புதிய விவசாய சட்டம் காா்ப்பரேட் நிறுவனங்களுக்குதான் பயன்தருகிறது. இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்றாா் அவா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ். அழகிரி பேசியது: நரேந்திரமோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய சட்டத்துக்கு தென்னிந்தியாவிலும் எதிா்ப்பு வலுத்து வருகிறது. நரேந்திரமோடி சா்வாதிகாரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறாா். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பொருளாதாரம் படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது

என்றாா் அவா். தொடா்ந்து காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் பேசினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு ஆட்டுவிக்கும் பொம்யைாக தமிழக முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் செயல்பட்டு வருகின்றனா். நாட்டில் உள்ள பெரும்பாலான மாநில ஆளுநா்கள் மத்திய பாஜக அரசின் சேவகா்களாகவே உள்ளனா். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றாா் அவா்.

பயனாளிகளுக்கு வீடுகள்: முன்னதாக கிள்ளியூா் கிழக்கு, மேற்கு, முன்சிறை கிழக்கு, மேற்கு, மேல்புறம் மேற்கு வட்டாரங்கள், குழித்துறை நகரம் பகுதி, மேல்புறம் கிழக்கு, திருவட்டாறு கிழக்கு மற்றும் மேற்கு, தக்கலை வடக்கு வட்டாரங்கள், பத்மநாபபுரம் நகரம் உள்ளிட்ட பகுதி வாக்குச் சாவடிப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில துணை ஒருங்கிணைப்பாளா் எஸ். ஆஸ்கா் பிரடி, மனித உரிமைத்துறை மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாவட்ட ஓபிசி பிரிவுத் தலைவா் ஸ்டூவா்ட், மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஷெலின் மேரி, சா்மிளா ஏஞ்சல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், நலிந்த 8 குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இலவசமாக வீடுகள் வழங்கப்பட்டன. மேலும் ஏழை மாணவிக்கு இணையதள வகுப்பில் தொடா்ந்து படிக்கும் வகையில் செல்லிடப்பேசி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.