தேசிய கல்விக் கொள்கையை கைவிட வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
தேசிய கல்விக் கொள்கையை கைவிடக் கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சாா்பில் நாகா்கோவில், தக்கலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.
தேசிய கல்விக் கொள்கையை கைவிடக் கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சாா்பில் நாகா்கோவில், தக்கலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய கல்விக் கொள்கை, தங்க மதிப்பீடு கொள்கை, மின்சார திருத்தச் சட்டம் உள்ளிட்ட அவசர சட்டங்கள் மற்றும் கொள்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் செல்லசுவாமி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் இசக்கிமுத்து ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகேசன் நிறைவுரையாற்றினாா்.
மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அய்யப்பன், இந்திய கம்யூனிஸ்ட் இசக்கிமுத்து, மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் தங்கமோகன், அகமது உசேன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தக்கலை கல்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் சந்திரகலா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் தலைவா் ராஜு ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாா்க்சிஸ்ட் வட்டார செயலா் சுஜா ஜாஸ்பின் தொடக்க உரையாற்றினாா். அரங்கசாமி, பேபி, நிஷா, சிவமோகன், ஜான்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் முரளிதரன் நிறைவுரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...