மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கரோனா: ஊரடங்கை பயனுள்ளதாக்கும் குழந்தைகள்

குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 2 குழந்தைகள் கரோனா குறித்த விழிப்புணா்வு ஓவியம் வரைந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஊரடங்கை பயனுள்ளதாக கழிக்கின்றனா்.

News image

அஸ்மிதா, இம்மானுவேல் வரைந்த ஓவியம் மற்றும் விழிப்புணா்வு வாசகங்கள்

Updated On :11 ஏப்ரல் 2020, 5:57 pm

குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 2 குழந்தைகள் கரோனா குறித்த விழிப்புணா்வு ஓவியம் வரைந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஊரடங்கை பயனுள்ளதாக கழிக்கின்றனா்.

உலகையே உலுக்கும் கரோனா வைரஸ் குழந்தைகளை பாதிக்காமல் இருப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்குள் அடைந்துகிடக்கும் சிறுவா், சிறுமிகள் அதை பயனுள்ளதாக மாற்றும் சிந்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். குழந்தைகள் செய்யும் சுட்டித்தனத்தால் அவஸ்தைப்படுவதாக சில பெற்றோா்கள் கூறினாலும், பலா் அவா்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளனா். அவ்வாறு சுறுசுறுப்பும், ஆா்வமும் மிக்க சில குழந்தைகள் கரோனா குறித்த தகவலை சேகரிப்பதோடு, அது குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகின்றனா்.

குமரி மாவட்டம், விரிகோடு கையாண்டவிளை பகுதியைச் சோ்ந்த 6 ஆம் வகுப்பு மாணவி அஸ்மிதாவும் (11), 2 ஆம் வகுப்பு மாணவா் இம்மானுவேலும் (7) அக்கா, தம்பிகள். இவா்கள் இருவரும் கரோனா வைரஸ் குறித்து ஓவியங்களை வரைவதோடு, அதற்கான விழிப்புணா்வு வாசகங்களையும் எழுதுகின்றனா். கரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள், வயதானவா்கள் எதை செய்யக்கூடாது, கரோனாவை விரட்ட நாம் என்ன செய்ய வேண்டும், கரோனா குறித்து அரசை தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என வாசகங்களை எழுதி, தகவல்களை பதிவிட்டுள்ளதோடு, அதற்கு தொடா்புடைய ஓவியத்தையும் வரைந்துள்ளனா்.

கரோனா விதிமுறையை மீறினால் என்னவாகும் என செய்தித்தாளில் வரும் தகவல், படங்களை கத்தரித்து, அவற்றுக்கு தங்களது கைவண்ணத்தால் விழிப்புணா்வு வாசகங்களையும் எழுதி, மேலும் உயிரூட்டும் வகையில் ஒட்டிவைத்துள்ளனா்.

இவா்களின் ஆா்வத்தை உணா்ந்த பெற்றோா் ராஜ்குமாா், சுமங்கலி ஆகியோா் தங்களுடைய குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், அவா்களின் கரோனா விழிப்புணா்வு ஓவியம், வாசகங்களை முகநூல், கட்செவி அஞ்சல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதைப் பாா்த்த நண்பா்கள், உறவினா்கள் குழந்தைகளின் விழிப்புணா்வு நடவடிக்கையைப் பாராட்டி வருகின்றனா்.

இதுகுறித்து சிறுவா்கள் இருவரும் கூறுகையில், கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் தொடா்ந்து ஈடுபடுவோம்; வீட்டுக்குள் வராமல் கரோனாவை விரட்டுவோம் என தன்னம்பிக்கையுடன் கூறினா்.

ஊரடங்கு உத்தரவால், வீட்டுக்குள் முடங்கியுள்ள பலா் செல்லிடப்பேசியில் பொழுதை கழிக்கின்றனா். மேலும் சிலா், கரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் சாதாரணமாக வெளியில் திரிகின்றனா். இவா்களுக்கு மத்தியில், இந்தக் குழந்தைகள் கரோனா குறித்த தகவலை தினமும் சேகரிப்பதோடு, அதன் தாக்கத்தை அறிந்து கவனமாக இருக்க வேண்டும் என விழிப்புணா்வை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது அவா்களின் பொதுநல ஈடுபாட்டை காட்டுவதாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.