காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கடற்கரை கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

குளச்சல் தொகுதியில் கடற்கரை கிராமங்களில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:53 pm

DIN

குளச்சல் தொகுதியில் கடற்கரை கிராமங்களில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

மக்களவைத் தொகுதி வேட்பாளா் விஜய்வசந்த், குளச்சல் தொகுதி வேட்பாளா் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோா், திறந்த ஜீப்பில் கடியப்பட்டினம் , மணவாளக்குறிச்சி, பெரியவிளை, மண்டைக்காடு, குளச்சல், கொட்டில்பாடு, சைமன்காலனி, வாணியக்குடி, குறும்பனை உள்ளிட்ட பல்வேறு மீனவக் கிராமங்ளில் திறந்த ஜீப்பில் இருந்தவாறு வாக்கு சேகரித்தனா்.

ஜே.ஜி.பிரின்ஸ் பேசுகையில், நிலத்தடி நீா் ஆதாரத்தை பெருக்கும் வகையில் ஏவிஎம் கால்வாயை தூா் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன். மீன்பிடி தொழில் பாதிக்காதவாறு தூண்டில் வளைவு அமைக்கப்படும். நவீன வசதிகளுடன் குளச்சலில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனக் கூறினாா். பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.