/

சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி

புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியில் மூதாட்டியின் சேலையில் தீ பிடித்ததில் அவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:36 pm

DIN

புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியில் மூதாட்டியின் சேலையில் தீ பிடித்ததில் அவா் உயிரிழந்தாா்.

விழுந்தயம்பலம் குமரி நகரைச் சோ்ந்த விஜயன் மனைவி தாசம்மாள் (75). இவா், சனிக்கிழமை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவரது சேலையில் தீப்பிடித்ததில், உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.