பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மேலும் 54 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில், தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளா் உள்பட மேலும் 54 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:46 pm

DIN

குமரி மாவட்டத்தில், தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளா் உள்பட மேலும் 54 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,891 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 24 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 17,264 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 362 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில், கடந்த 20 நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் கடந்த 10 நாள்களில் மட்டும் 600 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 150 க்கும் மேற்பட்டோா் நாகா்கோவில் நகரைச் சோ்ந்தவா்கள். கரோனா பாதிக்கப்பட்டோா் அனைவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. நாகா்கோவிலைச் சோ்ந்த இவா் வில்லுக்குறியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கடந்த 6 ஆம் தேதி தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். இதைத்தொடா்ந்து உதவி ஆய்வாளரின் குடும்பத்தினா் தனிமைப்படுத்தபட்டு, அவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் உதவி ஆய்வாளருடன் அதே வாக்குச்சாவடியில் பணியில் இருந்த மற்ற போலீஸாருக்கும் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பொது இடங்களுக்கு வரும் போது முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை சுகாதாரத்துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.