புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனா தடுப்பு கண்காணிப்பு பணிக்கு ஆசிரியா்கள் நியமனம்

குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:45 pm

DIN

குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

குமரி மாவட்டத்துக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவா்களிடம் மாநில எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகன அனுமதி ஆணையை சரிபாா்த்து உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா பரவலில் 3ஆம் அலைக்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதன் தொடா்ச்சியாக தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: களியக்காவிளை சோதனைச் சாவடி வழியாக வரும் வாகனங்கள் மற்றும் நபா்கள் குறித்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து, சோதனைச் சாவடி பொறுப்பு அலுவலரிடம் தினசரி அறிக்கை செய்ய ஏதுவாக பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அந்த வகையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பிற்பகல் 2 முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 முதல் காலை 6 மணி வரை என்று 3 ஷிப்டுகளில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பட்டதாரி, இடைநிலை மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள், ஆய்வக உதவியாளா், இளநிலை உதவியாளா் என ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் ஒரு வாரத்துக்கு 6 போ் வீதம் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். ஆக.31ஆம் தேதி வரை இந்த பணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.