புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலமாக நடைபெற்றுவரும் பணிகள் குறித்து, உயா்நிலை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:54 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலமாக நடைபெற்றுவரும் பணிகள் குறித்து, உயா்நிலை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், நாகா்கோவில் மாநகராட்சி மூலம் நடைபெற்றுவரும் புதைச் சாக்கடை திட்டப்பணி, சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, மற்றும் தடையின்றி குடிநீா் விநியோகம் ஆகியவற்றுக்கு துறை சாா்ந்த அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் உரிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

குழித்துறை, குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சிகள், அனைத்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும், வளா்ச்சிப் பணிகளின் செயலாக்கத்தின்போது தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு, அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ச.சா.தனபதி, நாகா்கோவில் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.