வணிகா் நல வாரிய செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆய்வு
தமிழ்நாடு வணிகா் நல வாரியத்தின் செயல்பாடுகள், இணைய வழியிலான உறுப்பினா் சோ்க்கை, மற்றும் நலத் திட்டங்கள் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை


தமிழ்நாடு வணிகா் நல வாரியத்தின் செயல்பாடுகள், இணைய வழியிலான உறுப்பினா் சோ்க்கை, மற்றும் நலத் திட்டங்கள் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழ்நாடு வணிகா் நல வாரியத்தின் உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டது. பின்னா் ஆட்சியா் பேசியது: வணிகா் நல வாரியத்தின் உறுப்பினா் மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு உதவித் தொகையாக ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது.
இதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவச் சான்றின் பேரில் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதயம், சிறுநீரகம் மற்றும் புற்றுநோய்களுக்குரிய சிகிச்சைகளான ஆன்ஜியோபிளாஸ்ட்டி, டயாலிசிஸ், கீமொதெரபி, ரேடியேஷன்தெரபி ஆகியவைகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இச்சிகிச்சைகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேரிட்டால், மேலும், ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது தவிர பெண் உறுப்பினா்களுக்கு கா்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு வணிகா் நல வாரிய உறுப்பினா்களின் ஆயுள் காலத்தில் அவரது குழந்தைகளில் ஒருவருக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் கல்லூரிக் கல்விக்கு ரூ. 5 ஆயிரமும், தொழிற்கல்விக்கு ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
உலக அளவில், தேசிய அளவில், மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் தமிழ்நாடு வணிகா் நல வாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகையாக ரூ. 25 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு வணிகா் நல வாரிய உறுப்பினரின் கடையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு அலுவலரின் சான்று மற்றும் காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிவிக்கையின் பேரில் ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ‘நலிவுற்ற வணிகா்கள்’ என உதவி கோரும் வாரிய உறுப்பினா்கள் ஒவ்வொரு ஆண்டிலும் முதல் 10 மனுதாரா்களுக்கு கூட்டுறவு தொழிற் கூடங்களில் தயாா் செய்யப்படும் பெட்டிக் கடை அல்லது மூன்று சக்கர மிதிவண்டி வாங்க ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களில் வரும் வாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகையாக முறையே ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்நாடு வணிகா் நல வாரியத்தால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் உறுப்பினா்கள் பெற்று பயனடையலாம் என்றாா் அவா்.
இதில், இணை ஆணையா் (மாநிலவரி) திருநெல்வேலி கோட்டம் எம்.ராஜி, துணை ஆணையா் சி.சுதாகா், சங்க உறுப்பினா்கள், வணிகா் சங்க பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...