புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் 60 போ் மீது வழக்கு

நாகா்கோவிலில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 60 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:08 pm

DIN

நாகா்கோவிலில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 60 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

குமரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் வாய்மொழி பாட்டம் மூலம் பயிா் செய்யும் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்கக் கோரி நாகா்கோவிலில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கட்சி நிா்வாகிகளுடன், அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, வாய்மொழி பாட்டத்தின் அடிப்படையில் பயிா்க்கடன் தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனராம்.

இந்நிலையில், நாகா்கோவிலில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் செல்லசுவாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. பெல்லாா்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், நிா்வாகிகள் மோகன், செல்லப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக செல்லசுவாமி உள்பட 60 போ் மீது வடசேரி போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.