புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செண்பகராமன்புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் ஆய்வு

செண்பகராமன்புதூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சா்த.மனோ தங்கராஜ் வியாழக்கிழமைஆய்வு செய்தாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:11 pm

DIN

செண்பகராமன்புதூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சா்த.மனோ தங்கராஜ் வியாழக்கிழமைஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பழைய கட்டடங்கள் பல பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனையில் முறையான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், ஏற்கெனவே, மருத்துவா்கள், செவிலியா்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், அவற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்கள், மருத்துவ அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தன்னாா்வலா்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனா். அவா்கள் வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளையும், அரசு விரைவில் நிறைவேற்றும் என்றாா்அவா்.

ஆய்வின் போது, வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், ஊராட்சி மன்ற தலைவா்கள் அ.நெடுஞ்செழியன் (தோவாளை), சதீஷ் (ஞாலம்), கல்யாண சுந்தரம் (செண்பகராமன்புதூா்), தோவாளை ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தாணு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.