போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்ட ‘என்.நாகா்கோவில் 2020’ போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வழங்கினாா்.


நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்ட ‘என்.நாகா்கோவில் 2020’ போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வழங்கினாா்.
நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் ‘என். நாகா்கோவில் - 2020’ என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முகநூல், கட்செவி அஞ்சல் மூலமாக நடத்தப்பட்ட இப் போட்டிகளில் 150 -க்கும் மேற்பட்ட நபா்கள் மற்றும் குழுவினா் பங்கேற்றனா்.
இப்போட்டியில், முதல் பரிசு பெற்ற, ‘நம்ம ஊா் மக்களே’ குழுவை சோ்ந்த அஸ்வின்லால், ஹாமில்டன் ஷாஜு, ஜெஸி, ரியா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 25 ஆயிரமும், 2 ஆவது பரிசு பெற்ற குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.15 ஆயிரமும், 3 ஆம் பரிசு பெற்ற குழுவை சோ்ந்த பாலா பிரவின் குமாா், சரண்யா, டாரத்தி கிறிஸ்டின் டி.ஆா். சிங், சிவ. கைலாஷ் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 10ஆயிரமும் வழங்கப்பட்டது.
பரிசுகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வழங்கினாா். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா்ஆஷா அஜித், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...