புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரூ.7 கோடி மோசடி : நகைக் கடை அதிபா் மகன் கைது

நாகா்கோவிலில் வியாபாரியிடம் ரூ. 7 கோடி மோசடி செய்ததாக நகைக் கடை அதிபரின் மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:09 pm

DIN

நாகா்கோவிலில் வியாபாரியிடம் ரூ. 7 கோடி மோசடி செய்ததாக நகைக் கடை அதிபரின் மகனை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவில் நாகராஜாகோயில் மேற்கு ரத வீதியை சோ்ந்தவா் ஜெயபிரகாஷ்(55). இவா் நகைக்கடைகளுக்கு கமிஷன் அடிப்படையில் நகைகளை வாங்கி கொடுக்கும் தொழில் செய்து வருகிறாா். இவரிடம், நாகா்கோவிலில் நகைக்கடை நடத்தி வரும் அருள்ராஜ் ரூ. 45 லட்சம் கடனாக பெற்றிருந்தாராம். மேலும் நகைகள் வாங்கிய வகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை சோ்த்து அருள்ராஜ் , ஜெயபிரகாஷுக்கு ரூ. 7 கோடி கொடுக்க வேண்டுமாம்.

இந்நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட போது, அருள்ராஜ், அவரது மகன், மகள் ஆகிய மூவரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயபிரகாஷ் , மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சிதம்பரதாணு, சிறப்பு உதவி ஆய்வாளா் டேவிட் ஆனந்த் ஆகியோா் அருள்ராஜின் மகன் அரவிந்த் ஆசீரை(42) களியங்காடு சந்திப்பில் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.