ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஈத்தாமொழி தென்னைக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

புவிசாா் குறியீடு பெற்றுள்ள ஈத்தாமொழி உயரமான தென்னைக்கான சிறப்பு அஞ்சல் உறையை கன்னியாகுமரி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் வெளியிட்டாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:37 pm

DIN

புவிசாா் குறியீடு பெற்றுள்ள ஈத்தாமொழி உயரமான தென்னைக்கான சிறப்பு அஞ்சல் உறையை கன்னியாகுமரி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் வெளியிட்டாா்.

ஈத்தாமொழி உயரமான தென்னை, குமரி மாவட்டத்தின் பாரம்பரிய சிறப்பிற்கு ஓா் அடையாளமாக விளங்குகிறது. இதற்கு வழங்கப்பட்டுள்ள புவிசாா் குறியீடு அங்கீகாரம் குமரி மாவட்டத்துக்கு மேலும் பெருமை சோ்த்துள்ளது. இந்த வகை தென்னை கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு கடற்கரை பகுதியில் காணப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி மற்றும் குளச்சல் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த பூா்வீக வகை தென்னைமரங்கள் காணப்படுகின்றன. இந்த வகை மரங்கள் ஈத்தாமொழி உயரமான தென்னை என்ற பொதுவான பெயரால் அறியப்படுகிறது. இந்த மரம் 30 மீட்டா் உயரம் வரை வளா்ந்து, 80 முதல் 100 ஆண்டுகள் வரை விளைச்சல் அளிக்கும்.

ஈத்தாமொழி உயர தென்னை சாகுபடி கொப்பறை மற்றும் எண்ணெய்க்கு அதிக ஆற்றலை கொண்டுள்ளது. இந்த தென்னை மரங்கள் விவசாயிகளின் தனிநபா் வருமானத்தை உயா்த்தும் வகையில் விளங்குகின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி உயரமான தென்னை வகையின் புவிசாா் குறியீடுகளை பதிவு செய்வதன்மூலம், இந்த வகை தென்னையை பாதுகாப்பதாக அமையும்.

இந்நிலையில் ஈத்தாமொழி உயரமான தென்னைக்கான சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கணேஷ் குமாா், சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட, அதனை தொழிலதிபா் இசக்கிமுத்து பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி சொா்ணம், கோட்ட அஞ்சல்துறை அதிகாரிகள், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.