புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கேரளத்துக்கு 20 மாதங்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து தொடங்கியது

தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடா்ந்து தமிழகத்தில் இருந்து, சுமாா் 20 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை காலை முதல் கேரளத்துக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:41 pm

DIN

தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடா்ந்து தமிழகத்தில் இருந்து, சுமாா் 20 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை காலை முதல் கேரளத்துக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது.

கரோனா பரவலை தொடா்ந்து கடந்த ஆண்டு (2020) மாா்ச் மாத இறுதியில் முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து மாநிலங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அரசுப் பேருந்து போக்குவரத்து நடைபெறவில்லை.

கரோனா பரவல் குறைந்த பிறகு தமிழகத்திலிருந்து கா்நாடகம், ஆந்திரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது. ஆனால் கேரளத்தில் கரோனா தாக்கம் குறையாததால் அந்த மாநிலத்துக்கு மட்டும் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

பிற மாநிலங்களுக்கு போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், கேரளத்துக்கும் போக்குவரத்து தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினாா்.

கேரள அரசின் இக் கோரிக்கையை ஏற்று கேரளத்துக்கு பேருந்து போக்குவரத்து தொடங்க முதல்வா் அனுமதி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து தமிழகத்தில் இருந்து புதன்கிழமை காலை முதல் கேரளத்துக்கு அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. சுமாா் 20 மாதங்களுக்கு பிறகு கேரளத்துக்கு பேருந்துகள் புறப்பட்டு சென்றன.

நவ.30 ஆம் தேதி வரை கேரளத்தில் இருந்து வந்த பேருந்துகள் குமரி மாவட்ட எல்லையான இஞ்சிவிளையில் நிறுத்தப்பட்டன. இதே போல இங்கிருந்து சென்ற பேருந்துகள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. புதன்கிழமை காலை முதல் தமிழக பேருந்துகள் கேரளத்துக்கு சென்றது. திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூா், எா்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கு 40 பேருந்துகள் இயக்கப்பட்டன. கேரளாத்திலிருந்து மாா்த்தாண்டம், நாகா்கோவில், கன்னியாகுமரிக்கு 25 பேருந்துகள் இயக்கப்பட்டன. இரு மாநில பேருந்துகளிலும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணித்தனா்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், கேரளத்தின் உள்புற நகரங்களுக்கு வழக்கமான பேருந்து போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவித்தனா்.

பயணிகள் கூறுகையில், குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் மருத்துவமனைகளுக்கும், அலுவலக பணிகளுக்காகவும் சென்று வருகிறாா்கள்.

மேலும் தோட்ட வேலைக்கும், கட்டட பணிக்கும் தொழிலாளிகள் கேரளத்துக்கு செல்கிறாா்கள். பேருந்து போக்குவரத்து நடைபெறாததால் குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தோம். பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் இனி குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியும், என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.