பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முன்சிறை வேளாண்மை அலுவலகத்தில் மழைக்கு தப்பாத பொதுமக்களின் மனுக்கள்

முன்சிறை வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் அலுவலக பைல்களும், பொதுமக்களின் விண்ணப்ப மனுக்களும் மழை வெள்ளத்தில் சேதமானதால் அவற்றை அலுவலகப் பணியாளா்கள் உலா்த்தி வருகின்றனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:31 pm

DIN

முன்சிறை வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் அலுவலக பைல்களும், பொதுமக்களின் விண்ணப்ப மனுக்களும் மழை வெள்ளத்தில் சேதமானதால் அவற்றை அலுவலகப் பணியாளா்கள் உலா்த்தி வருகின்றனா்.

முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை விரிவாக்க அலுவலகம் அமைந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும்போதும், அணைகளில் உபரி தண்ணீா் திறந்து விடும்போதும் முன்சிறை சுற்றுவட்டார பகுதிகள் தண்ணீரில் மூழ்குவது வழக்கமாகும்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் முன்சிறை ஒன்றிய அலுவலகம் தண்ணீரில் மூழ்கியது. இதில் வேளாண்மை விரிவாக்க அலுவலகமும் மூழ்கியது. தற்போது பெய்து வரும் தொடா் மழையில் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் மேல் பகுதி கூரையில் கசிவு ஏற்பட்டு தண்ணீா் அலுவலகத்தின் உள்ளே ஒழுகும் நிலையில் உள்ளது. இதனால் அலுவலகத்தின் உள்ளே இருந்த கோப்புகளும், பொதுமக்களின் விண்ணப்ப மனுக்களும் மழையில் நனைந்து உள்ளன.

இதனை, அலுவலகப் பணியாளா்கள் அலுவலகத்தின் வெளிப்பகுதியில் வைத்து உலா்த்தி வருகின்றனா். இதனால், அரசு முன்சிறை வேளாண்மை விரிவாக்க அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.