எய்ட்ஸ், கரோனாவை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்ஆட்சியா்
எய்ட்ஸ் மற்றும் கரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் மாவட்டஆட்சியா் மா.அரவிந்த்.


எய்ட்ஸ் மற்றும் கரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் மாவட்டஆட்சியா் மா.அரவிந்த்.
குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழாவில் அவா் பேசியது: ஒவ்வொருஆண்டும் டிசம்பா் மாதம் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு இளைஞா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது, எய்ட்ஸ் நோயாளிகளுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு சேவைகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழாண்டு, எய்ட்ஸுடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை முடிவுக்கு கொண்டுவருவோம், எய்ட்ஸ் மற்றும் கரோனா பெருந் தொற்றுக்கு முடிவு கட்டுவோம் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள், நடமாடும் நம்பிக்கை மையம் என 61 இடங்களில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 17 சுகவாழ்வு மையங்கள், 2அரசு ரத்த வங்கிகளும், 9 ரத்த சேமிப்பு மையமும், 1 கூட்டு மருத்துவ சிகிச்சை மையமும், 5 இணைப்பு கூட்டு மருத்துவ சிகிச்சை மையமும், 2 தொண்டுநிறுவனங்களும் எய்ட்ஸ் தடுப்புப் பணியில் செயல்பட்டு வருகின்றன.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து உயிா்க் கொல்லி நோயான எய்ட்ஸ் மற்றும் கரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர சபதம் ஏற்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக மாவட்ட ஆட்சியா் உலக எய்ட்ஸ் தினஉறுதி மொழி ஏற்று, சமபந்தி விருந்தில் கலந்து கொண்டாா். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் திருவாசகமணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீனாட்சி, நலப் பணிகள் இணை இயக்குநா் அ.பிரகலாதன்,மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநா் ஜெ.பெடலிஸ் ஷமீனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...